TN Samacheer Kalvi - (TNSCERT)
10th Std-Unit II - July Assignment - Answer Key

Join GRLVidya’s Telegram group to get latest updates.
10th Tamil Unit II Assignment Answer Key

10th Std  Tamil – Unit II – July Assignment Answer Key.

ஒப்படைப்பு – 2 வினா விடைகள் 

10th Std  Tamil  – July Assignment Answer Key.

இயல்- 2- இயற்கை, சுற்றுச் சூழல்

பகுதி – அ

1.ஒரு மதிப்பெண் வினாக்கள்
  1. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படையான சூழல் எது?
 அ ) மலை ஆ ) இயற்கைஇ) கடல்ஈ)  காடு
விடை : ஆ ) இயற்கை 
  1. கடுங்காற்று என் தன் எதிர்ச்சொல் தருக
அ ) கடல் காற்று     ஆ) மென்காற்றுஇ) சுழல்காற்று ஈ) புயல் காற்று
விடை : ஆ ) மென்காற்று 
  1. வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் – எனப் பாடியவர் பார்?
அ) ஒளவையார்  ஆ ) பாரதியார்இ) திருவள்ளுவர்  ஈ) இளங்கோவடிகள்
விடை : ஈ ) சிலப்பதிகாரம்
  1. முல்லைத் திணைக்குரிய  உரிப்பொருள்
அ) இருத்தல்   ஆ) இரங்கல்இ) ஊடல்    ஈ) புணர்தல்
விடை : அ ) இருத்தல்
  1. பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் எது?
அ ) நெடுநல்வாடைஆ) திருமுருகாற்றுப்படைஇ )பட்டினப்பாலைஈ) முல்லைப்பாட்டு
விடை : ஈ ) முல்லைப்பாட்டு 
  1. கரும்பு தின்றான் என்பது எவ்வகைத் தொடர் ?
அ ) வினையெச்சுத் தொடர்ஆ ) தொகை நிலைத் தொடர்இ) தொகாநிலைத் தொடர்ஈ) விளித்தொடர்
விடை : ஆ ) தொகைநிலைத்தொடர்
7 ) மூதூர் – இலக்கணக்  குறிப்பு தருக.
அ) வினைத் தொகை ஆ) பண்புத்தொகைஇ) உவமைத் தொகை ஈ) உம்மைத் தொகை
விடை : ஆ ) பண்புத்தொகை
8 ) மைவிகுதி பெறும் தொகை
அ) பண்புத்தொகை ஆ) வேற்றுமைத் தொகைஇ) உவமைத் தொகை ஈ) உம்மைத் தொகை
விடை :  அ ) பண்புத்தொகை
  1. கீழ்க்கண்டவற்றுள் பாரதியாரின் படைப்பு எது?
அ) அழகின் சிரிப்புஆ) பாண்டியன் பரிசுஇ ) பாஞ்சாலி சபதம்ஈ )குடும்ப விளக்கு
விடை : இ ) பாஞ்சாலி சபதம்
  1. வசன கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார் ?
அ ) மு. மேத்தாஆ ) புதுமைப்பித்தன்இ ) பாரதியார்
ஈ) நாகூர் ரூமி
விடை : இ ) பாரதியார்

பகுதி.ஆ

குறுவினா

  1. வசன கவிதை – குறிப்பு வரைக.
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது.
  1. காற்றைச் சிறப்பித்து ஔவியார் எவ்வாறு பாடியுள்ளார் ?
வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்ஆயுள் பெருக்கம்உண் டாம்என்று வாயுதாரணை எனும் அதிகாரத்தில் ஔவையார் காற்றைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
  1. நான்கு திசைகளிலிருந்து வீசக் கூடிய காற்றின் பெயர்களை எழுதுக.
கிழக்கு  –  கொண்டல்மேற்கு    –  கோடைவடக்கு   –  வாடைதெற்கு   – தென்றல்
  1. மரம் தரும் வரமாக காற்று கூறுவது யாது?
ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 முறை மூச்சுக்காற்றாய் நீங்கள் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு உங்கள் நுரையீரலுக்குத் தேவையான உயிர்வளியைத் தரும் என் தோழர்களான மரங்களை வளருங்கள் என்று மரம் தரும் வரமாகக் காற்றுக் கூறுகிறது.
  1. விரிச்சி – விளக்கம் தருக.
* ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள் மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய் தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்.* அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழி கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

பகுதி- 3

III. நெடுவினா
  1. காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
*  குப்பைகள், நெகிழிப் பைகள், மெது உருளைகள் (tyres) போன்றவற்றை எரிப்பது, குளிர்சாதனப்பெட்டி, குளிரூட்டப்பட்ட அறை ஆகியவற்றை மிகுதியாகப் பயன்படுத்துவது, மிகுதியாகப் பட்டாசுகளை வெடிப்பது, புகை வடிகட்டி இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்குவது, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தாத தனிமனிதரின் மிகுதியான ஊர்திப்பயன்பாடு, வானூர்திகள் வெளிவிடும் புகை இவற்றால்  கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்று நோய், இளைப்பு நோய் எனப் பல நோய்கள் ஏற்படுகின்றன.*  காற்று  மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.
  1. முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விளக்குக.
* அகன்ற உலகத்தை வளத்தைப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச்சங்கு பொறித்த வலிமையான கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாபலிச் சக்கரவர்த்தி தன் கையிலே நீர் ஊற்றியபொழுது மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம்.* அம்மேகமானது ஒலி முழுங்குகின்ற குளிர்ச்சியான கடல் நீரைப் பருகி, வலப்பகக்கமாக எழுந்து, மலைகளை இடமாகக் கொண்டு விரைந்து சென்று, பெரிய மழையைப் பொழிகிறது. அம்மாலைப்பொழுதானது பிரிவுத் துன்பத்தைத் தருவதாக இருக்கின்றது.* முதிய பெண்கள் மிகுந்த காவலுடைய ஊர்ப்பக்கம் சென்று யாழிசையைய் போன்று வண்டுகள் ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள், அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டுவந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.* அங்கு, சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள் “புல்லை மேய்ந்து தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே” என்றாள்.* இது நல்ல சொல் எனக் கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர். நின் தலைவன்பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவது உறுதி. தலைவியே மனத்தடுமாற்றம் கொள்ளாதே என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர்.இவையே முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளாகும்.

இயல்-3 – பண்பாடு

பகுதி–அ

ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. விருந்தொடு உண் இத்தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபு
அ) ஐஆ) இன்
இ) ஒடு
ஈ)ஆல்
 
  1. உபசரித்தல் என்பதற்கான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ) உணவிடுதல்ஆ) உரையாடுதல்ஆ) தங்கவைத்தல் 
ஈ) விருந்தோம்பல்
 
3.உயர்பண்பு என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க 
அ) பண்புத் தொகை 
ஆ) வினைத்தொகைஇ) வேற்றுமைத்தொகை ஈ)அன்மொழித்தொகை
 
  1. விருந்தே புதுமை எனக்கூறியவர் யார்?
அ) ஒளவையார்
ஆ) தொல்காப்பியர்
இ) கம்பர்ஈ) இளங்கோவடிகள் 
 
  1. தனித்து உண்ணாமை என்பது.
அ) தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை செயல் 
ஆ) உணவளிக்கும் முறைஇ) விருந்தினரைச் சிறப்பிக்கும் செயல்ஈ) விருந்தினரை வரவேற்றல்

 

  1. Classical Literature orodrugl
அ) வட்டார இலக்கியம் 
ஆ)நாட்டுப்புற இலக்கியம்
இ) செவ்லிலக்கியம்ஈ) பண்டைய இலக்கியம் 
  1. செப்பல் என்பதன் பொருள்.
அ) வருதல் இ) சிந்துதல்ஆ) அழுதுதல்
(ஈ)உரைத்தல்

 

  1. கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நுல்
அ)குறுந்தொகை 
இ) மலைபடுகடாம்
ஆ) திருமுருகாற்றுப்படை ஈ) நற்றிணை

  

  1. நும் இல் போல நில்லாது புக்கு இவ்வடியில் இல் என்பதன் பொருள் யாது?எது?
அ) இலவம்
இ) இல்லம்
ஆ) இலைஈ) இல்லை
 
  1. பெயரெச்சத் தொடரை தேர்தெடுக்க
அ) கேட்டவர் பாடல்இ)கேட்டுப் பாடினார்.
ஆ) கேட்ட பாடல்
ஈ) கேட்டார் பாடினார்

பகுதி–ஆ

II.குறுவினா

  1. குடும்பத் தலைவியின் விருந்தோம்பல் பண்பு குறித்து நற்றிணை குறிப்பிடுவது யாது?
  • “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறுகிறது நற்றிணை .
 
  1. பெரியபுராணம் வழியே புலப்படுத்தப்படும் விருந்தோம்பல் பற்றிய செய்தியைக் கூறுக
  • “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்கிறது பெரியபுராணம் .
 
  1. அதிவீரராம பாண்டியர் –குறிப்பு வரைக.
  • பெயர் : அதிவீரராம பாண்டியன்
  • சிறப்பு : கொற்கையின் அரசர் தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தார்.
  • பட்டப் பெயர் : சீவலமாறன்
  • இயற்றிய நூல்கள் : காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம், வெற்றிவேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை.’

 

  1. தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?
  • ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருக்கும்.
  • அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்தும்.
  • இதுவே தொகாநிலைத் தொடர் எனப்படும்.

 

  1. வினையெச்சத் தொடரை எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக.
  • முற்றுப் பெறாத வினை (எச்சவினை) வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் எனப்படும்.
  • சான்று : பாடி மகிழ்ந்தனர்.

பகுதி–இ

III.சிறுவினா

  1. விருந்தோம்பல் குறித்து காசிக்காண்டம் கூறும் ஒன்பது நல்லொழுக்கங்களை விவரிக்க
  • விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
  • நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
  • முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
  • அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
  • வந்தவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும். மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
 
  1. பரிசில் பெற்ற கூத்தர் மற்ற கூத்தருக்கு ஆற்றுப்படுத்தும் செய்திகளை விளக்குக
முன்னுரை:
  • அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றுப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.
உணவு:
  • அன்றைய பாணர்கள் கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.
கல்வி:
  • கல்வி கற்க முடியாதவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பலர் வழிகாட்டல் செய்கின்றனர்.
தொழில்:
  • இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவு போக்கப்படுகின்றது.
நன்னடை:
  • சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய்ய இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.
முடிவுரை:
  • வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றுப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.

10th Std  Tamil  – July Assignment Answer Key.